ADDED : ஆக 28, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 29-
அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., நடுநிலைப்பள்ளியில் திருச்சுழி பகுதிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக நடந்த விழாவிற்கு தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் கணேசன் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி ஜீவானந்தம், விருதுநகர் பாலச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், அலமேலம்மாள் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பேசினர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுகுமார், ஜாக்குலின் ஜூலியட், புஷ்பவல்லி, செல்வி, சரஸ்வதி, தேன்மொழி ஆகியோர் ஏற்புரை செய்தனர். பொருளாளர் தினகரன் நன்றி கூறினார்.
___
