ADDED : நவ 27, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்,: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், தமிழக அரசு அறிவித்த ஈ.டி.ஐ.ஐ.ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கேற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
பேராசிரியர் டெனியின் தலைமையில் மாணவர்கள் பானு பிரகாஷ், பவன் பரத்வாஜ், சானியா பெனாசிர் முகமது, கிலாரி பார்கவ், நீலா பவானி ஆகியோர் பியாசோ பவர் ஹவுஸ் என்ற தலைப்பில் தங்கள் திட்டத்தை சமர்ப்பித்து தேர்வு பெற்று, அமைச்சர் அன்பரசனிடம் விருதும், சான்றிதழும் பெற்றனர்.
சாதனை மாணவர்களையும், பேராசிரியர்களையும் பல்கலைக்கழக துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், பேராசிரியர்கள் பாராட்டினர்.