ADDED : ஜூலை 19, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்னை எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் நடந்த இந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்ற நிலையில் இப்பள்ளி மாணவர்கள் அணி முதலிடம் பெற்றனர்.
சாதனை மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் ராமசுப்பிரமணியனையும்,
பள்ளி தலைவர் ஜானகி, செயலாளர் சுதாகர், கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.