ADDED : ஏப் 18, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டில் படித்த 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் பணி நியமன ஆணை பெற்றனர். மேலும் சென்னை லுாக்காஸ் டிவிஎஸ் நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு இயக்குனர் வேல்முருகன் பணி நியமன ஆணை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லுாரி தாளாளர் சோலைசாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் கண்ணபிரான், வேலைவாய்ப்பு அதிகாரி கிங்ஸ்லி போப் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
