UPDATED : அக் 12, 2026 04:56 PM
ADDED : அக் 12, 2026 04:54 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்விதுறை சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வட்டார அளவிலான குண்டு எறிதல், மும்முனை தாக்குதல், வட்டு எறிதல் போன்றவற்றில் மாணவர் பாலதருண், மிதுன், மாணவிகள் கிறிஸ்டினா ரூபாவதி, மகாலட்சுமி ஆகியோர் முதலிடம், குண்டு எறியும் போட்டியில் குருஅபிஷேக் மூன்றாமிடம், மும்முறை தாண்டும் போட்டியில் வதனா ஸ்ரீ முதலிடம் பெற்றனர்.
இதில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவிகள் கிறிஸ்டினா ரூபாவதி, மகாலட்சுமி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை மாணவர்களை தாளாளர் சிவக்குமரன், முதல்வர் சரவண ராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம், ஆசிரியர்கள் ஜெயக்குமார், சாந்தலட்சுமி பாராட்டினர்.
