நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை பி.டெக். ஐ.டி. துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஸோனித். இவர் இந்திய பல்கலை அசோசியேசன் சார்பில் புவனேஸ்வர் கலிங்கா பல்கலையில் நடந்த தனிநபர் வில்வித்தை போட்டியில் பங்கேற்றார்.
இதில் 72 அம்புகளை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் 70 மீட்டர் துாரத்தில் நின்று அம்புகள் எய்து 411 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் 339 ஆவது ரேங்க் பெற்றார்.
மாணவர் ஸோனித்தை பல்கலை வேந்தர் ஸ்ரீதரன், இணைவேந்தர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், துறைத் தலைவர் தனசேகர், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் சிதம்பரம், செல்வகுமார், விஜயலட்சுமி பாராட்டினர்.