/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வில்வித்தை பயிற்சியாளர் மாநில அளவிலான பயிற்சி
/
வில்வித்தை பயிற்சியாளர் மாநில அளவிலான பயிற்சி
ADDED : டிச 16, 2025 06:46 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் சார்பில் வில் வித்தை பயிற்சியாளர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நடந்தது.
சங்க மாநிலச் செயலாளர் ரத்தின சபாபதி துவக்கி வைத்தார். இதில் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து வில்வித்தை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் ரவிச்சந்திரன் தில்லை நடராஜன் ஆகியோர் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை சங்க மாவட்டச் செயலாளர் சூரியகலா, திருநெல்வேலி செயலாளர் பூல்பாண்டி, தென்காசி செயலாளர் இளையராஜா ஆகியோர் செய்தனர்.

