/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
/
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : ஜூலை 19, 2025 12:25 AM
சாத்துார்: சாத்துாரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசாமி, சுப்பிரமணியன் இடையே கடும் வாக்குவதாம் நடந்தது . இதில் அவர்களது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஆக.8ல் சாத்துாருக்கு 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரச்சாரத்திற்கு வரும் அக் கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசாமி, சுப்பிரமணியன், ராஜவர்மன் , திருச்சுழி ,அருப்புக் கோட்டை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்பதற்கு தேவையான நிதி உதவி தாருங்கள் என கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கூறினார். இதற்கு பிறகு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசாமிக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு தரப்பு ஆதரவாளர்களும் கோஷ்டியாக பிரிந்து ஒருவரை ஒருவர் வசை பாடினர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் சமரசம் செய்தார். இதையடுத்து தொடர்ந்து கூட்டம் நடந்தது