/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
/
சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : ஜூலை 29, 2025 05:23 AM

சாத்துார்; சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளருடன் கட்சியினர் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தனர்.
த.வெ.க. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சாத்துாரில் நடந்தது. சாத்துார் ,அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சின்னப்பரிடம் கூட்டம் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு மாவட்ட செயலாளர் முறைப்படி நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உங்கள் பகுதி நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் நான் முறையாக தகவல் தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் தங்களை மதிப்பதில்லை என கூறிய அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து அக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.