/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவியை பழிவாங்க நினைத்து வழக்கில் சிக்கிய ராணுவ வீரர்
/
மனைவியை பழிவாங்க நினைத்து வழக்கில் சிக்கிய ராணுவ வீரர்
மனைவியை பழிவாங்க நினைத்து வழக்கில் சிக்கிய ராணுவ வீரர்
மனைவியை பழிவாங்க நினைத்து வழக்கில் சிக்கிய ராணுவ வீரர்
ADDED : ஆக 03, 2025 02:29 AM
அருப்புக்கோட்டை:மனைவியை பழிவாங்க, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம் மாலை வந்த போனில் பேசிய நபர், 'பந்தல்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; சிறிது நேரத்தில் வெடிக்கும்' எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு தகவல் புரளி என, தெரிந்தது.
போலீசார் விசாரணையில், ஜம்முவில் ராணுவ வீரராக பணிபுரியும் சிவகாசியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளார். அந்த பள்ளியில் வேலை பார்க்கும் அவரது மனைவியை, பணியில் இருந்து நிறுத்துமாறு, பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
பள்ளி நிர்வாகம் அவரது கோரிக்கையை ஏற்காததால், அவர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. ஜெயப்பிரகாஷ் மீது, பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.