ADDED : ஜன 24, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் சிவந்திபுரம் அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன் 27, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டார். விருதுநகர் மேற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்கவும், நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையிலும், எஸ்.பி., கண்ணன் பரிந்துரையில் கலெக்டர் சுகபுத்ரா உத்தரவில் வெங்கடேஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
