ADDED : அக் 06, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் இரண்டு நாள் கலை விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் வரவேற்றார். கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம், ஒயிலாட்டம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் நடந்தது.
மாணவர்களுக்கு பேஷன் ஷோ, கிராமத்து பாடல்கள், குரூப் நடனம் நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கந்தசாமி, பிரியா, ஸ்ரீலேகா, விக்னேஷ், சங்கீதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.