ADDED : மார் 10, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் கெம் ஸ்பார்க் என்ற தலைப்பில் கலைத்திறன் போட்டிகள் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சாத்துார் தொழிலதிபர் ஆறுமுகசாமி பங்கேற்றார்.
இதில் உபதலைவர்கள் டெய்சிராணி, ராமசாமி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேதியியல் துறைத்தலைவர் சாமி நன்றி கூறினார்.

