/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன நெரிசலால் திணறும் அருப்புக்கோட்டை தேவை தற்காலிக மாற்றம்
/
வாகன நெரிசலால் திணறும் அருப்புக்கோட்டை தேவை தற்காலிக மாற்றம்
வாகன நெரிசலால் திணறும் அருப்புக்கோட்டை தேவை தற்காலிக மாற்றம்
வாகன நெரிசலால் திணறும் அருப்புக்கோட்டை தேவை தற்காலிக மாற்றம்
ADDED : அக் 29, 2024 04:39 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தீபாவளி முன்னிட்டு மக்கள் கூட்டம் அனைத்து பகுதிகளிலும் இருப்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதையடுத்து தற்காலிகமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருப்புக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அண்ணாதுரை சிலை பகுதி, மதுரை ரோடு, சத்தியமூர்த்தி பஜார், திருச்சூர் ரோடு உட்பட பகுதிகளில் ஜவுளி கடைகள் பல சரக்கு கடைகள் காய்கறி மார்க்கெட் உள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்காக ரோட்டில் இரு ஓரங்களிலும் தற்காலிகமாக நடைபாதையில் கடைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பண்டிகைக்கு பல்வேறு பொருட்களை வாங்க, நகரை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அலை அலையாய் இந்தப் பகுதிகளுக்கு வருகின்றனர்.
இதனால் கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாக உள்ளது. வாகனங்கள் அணிவகுப்பு போன்று செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசார்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில், அமுதலிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பிலிருந்து, சத்தியமூர்த்தி பஜார் வழியாக செல்லும் வாகனங்களை தற்காலிகமாக மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வாகன நெரிசல் குறைந்து மக்கள் இந்த பகுதிகளில் வந்து செல்ல வசதியாக இருக்கும்.

