/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் நடவில் களமிறங்கும் வட மாநில இளைஞர்கள் விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு செல்வதால்
/
நெல் நடவில் களமிறங்கும் வட மாநில இளைஞர்கள் விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு செல்வதால்
நெல் நடவில் களமிறங்கும் வட மாநில இளைஞர்கள் விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு செல்வதால்
நெல் நடவில் களமிறங்கும் வட மாநில இளைஞர்கள் விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு செல்வதால்
ADDED : செப் 08, 2025 06:13 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்வதால் அப்பகுதி விவசாயிகள் நெல் நடவுப் பணிகளுக்கு வட மாநில இளைஞர்களை ஈடுபடுத்த துவங்கியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரங்களான தேவதானம், சேத்தூர், ராஜபாளையம், அய்யனார் கோவில், மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்துார், புதுப்பட்டி, கான்சாபுரம், கூமாபட்டி, அத்தி கோயில், தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 2 முறை நெல் நடவு செய்யப்பட்டு நல்ல விளைச்சலை விவசாயிகள் பெற்று வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் சொந்த ஊரில் விவசாய கூலித் தொழிலாளராக நெல் நடவு, களை எடுத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளில் அதிகளவில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை நிறுவனங்கள் பட்டாசு உற்பத்திற்க்கு நல்ல சம்பளம் கொடுத்து தங்கள் பஸ்களில் காலையில் அழைத்து சென்று மாலையில் மீண்டும் வீடுகளுக்கு இறக்கி விட்டு செல்வதால், தற்போது ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்களாக மாறிவிட்டனர். மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்களில் இப் பகுதி மக்கள் சிவகாசிக்கு சென்று வருகின்றனர்.
இதனால் நெல் நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் உட்பட பல்வேறு விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் வட மாநில இளைஞர்களை, நில உரிமையாளர்கள் அழைத்து வந்து விவசாய தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இவர்கள் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு தொகை என மொத்த குத்தகை பேசி, நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வத்திராயிருப்பு பகுதிகளில் அதிகளவில் வட மாநில தொழிலாளர்களே நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.