/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு
/
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 15, 2024 04:48 AM

விருதுநகர்,: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் சாம்பல் தினத்தை முன்னிட்டு பாதிரியார்கள் கிறிஸ்தவர்களின் நேற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை துவக்கி வைத்தனர்.
விருதுநகர் புனித இன்னாசியர் சர்ச்சில் பாதரியார் அருள்ராயன், உதவி பாதிரியார் கரோலினி சிபு, பாண்டியன் நகர் புனித சவேரியார் சர்ச் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் இமானுவேல், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், சிவகாசி அருகே நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி, ஆர்.ஆர்.நகர்., புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர்ராய், உதவி பாதிரியார் அருள்தாஸ், சாத்துார் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் காந்தி, சாத்துார் அருகே ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான் மில்டன், சிவகாசி புனித லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான்மார்ட்டின், திருத்தங்கல் புனித அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக் அம்புரோஸ்ராஜ், காரியப்பட்டி புனித அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜோசப் அமலன், அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச் பாதிரியார் தாமஸ் எடிசன், தும்மு சின்னம்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் பாதிரியார் மரிய துரை, மீனம்பட்டி புனித அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ் தலைமையில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தினை துவங்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடந்தது. பிப். 16 முதல் மார்ச் 29 புனித வெள்ளி வரை 7 வாரம் வெள்ளிக்கிழமைகளில் சிலுவை ப்பாதை வழிபாடுகளும், 40 நாள்கள் தவக்கால வழிபாடுகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.

