/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்டால் வரச் சொல்லுங்க... போஸ்டர் ஒட்டியவர்கள் கைது
/
கண்டால் வரச் சொல்லுங்க... போஸ்டர் ஒட்டியவர்கள் கைது
கண்டால் வரச் சொல்லுங்க... போஸ்டர் ஒட்டியவர்கள் கைது
கண்டால் வரச் சொல்லுங்க... போஸ்டர் ஒட்டியவர்கள் கைது
ADDED : பிப் 28, 2024 01:19 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் 'கண்டால் வரச் சொல்லுங்க, எங்க தொகுதி எம்.பி.யை காணவில்லை' என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டிய கூலித்தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் எஸ்.ஐ., ரகுபதி கண்ணன் பஸ் ஸ்டாப் அருகில் நேற்றிரவு ரோந்து சென்ற போது 2 பேர் போஸ்டர்களை ஒட்டி சென்றனர். போஸ்டரில் 'கண்டா வரச் சொல்லுங்க, எங்க தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை, தென்காசி நாடாளுமன்ற மக்கள்' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருப்பதை போலீசார் கண்டனர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த போஸ்டர்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை விசாரித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த பொன்ராஜ், காளிராஜ் என்பதும், போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து பின் சொந்த ஜாமினில் விடுவித்தனர். இந்த போஸ்டரை ஒட்ட கொடுத்த அ.தி.மு.க.,வினர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

