UPDATED : நவ 26, 2026 05:37 PM
ADDED : நவ 26, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே மருளூத்து ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வானியல் மன்றம் துவங்கப்பட்டது.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், விண்வெளி, வானியல் குறித்த அறிவையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை ,மேங்கோ கல்வி நிறுவனத்துடன் இணைந்து வானியல் மன்றம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஷரண்யா அறி துவங்கி வைத்தார். மாவட்டத்தில் சிவகாசியில் 2 பள்ளிகளிலும், விருதுநகரில் 2 பள்ளிகள் என மொத்தம் 4 ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சி.இ.ஓ., அரவிந்தன், மேங்கோ கல்வி நிறுவனர் ஒபிலி சந்திரன், தொடக்கக்கல்வி டி.இ.ஓ., ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
