ADDED : செப் 02, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை, இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கூட்டு ஆசிரியர் குழு திட்டத்தின் மூலம் தேசிய விண்வெளி தினத்தையொட்டி வானியல், வான் இயற்பியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இயற்பியல் துறை தலைவர் ஜெயந்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். பெங்களூரு இந்திய வான் இயற்பியல் நிறுவனம் மூத்த பேராசிரியர் ஸ்டாலின், விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் பேசினர். 54 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவி செல்வ லட்சுமி தொகுத்து வழங்கினார். இயற்பியல் துறை துணை பேராசிரியர் நித்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.