தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மினிபஸ் டிரைவர் மீது தாக்குதல்

மினிபஸ் டிரைவர் மீது தாக்குதல்

மினிபஸ் டிரைவர் மீது தாக்குதல்


ADDED : மார் 24, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் என்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராம்குமார் 25. மினி பஸ் டிரைவரான இவர் நேற்று மதியம் 12:15 மணிக்கு ஓ.மேட்டுப்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு கீழே இறங்கிய போது அங்கு டூவீலரில் வந்த மூவர், அவரை இரும்பு கம்பியால் அடித்து உதைத்து தாக்கினர்.

பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை அடித்து உதைத்தவர்கள் மக்கள் வருவதை பார்த்து டூவீலரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us