/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல் 4 பேர் கைது, 5 பேருக்கு வலை
/
ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல் 4 பேர் கைது, 5 பேருக்கு வலை
ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல் 4 பேர் கைது, 5 பேருக்கு வலை
ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல் 4 பேர் கைது, 5 பேருக்கு வலை
ADDED : நவ 12, 2024 07:42 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் ரோந்து சென்ற போலீசாரை தாக்கிய கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி பாரதியார் தெரு பகுதியில் சிலர் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏட்டுகள் இசக்கி, ராம்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கலைந்து போக கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததுடன் போலீசாரின் லத்தியை பறித்து 9 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியுள்ளது. எஸ்.ஐ., மாரியம்மாள் தலைமையிலான போலீஸ் குழுவினர் காயமடைந்த இரண்டு போலீசாரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டதாக கீழ ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த பால்பாண்டி 31, கிளிராஜன் 24, பாஞ்சாலி ராஜா 40, பாண்டியராஜ் 22, ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.