ADDED : மார் 10, 2024 04:53 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவில் பாலகுருசாமி என்பவரது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புபேந்திரசேன்,18, குல்தீப் சர்மா,30, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இப்போது அங்கு வந்த மங்காபுரத்தைச் சேர்ந்த பாரதி சுரேஷ், சுந்தர்மற்றும் இருவர் சேர்ந்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்ததால் கல்லால் தாக்கி இருவரையும் காயப்படுத்தி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் பாரதி சுரேஷ், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
