/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்
/
அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்
அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்
அரசு பஸ் டிரைவர்களாக மாறிய ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள்
ADDED : ஜன 10, 2024 12:10 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு டிப்போக்களில் அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்கை சமாளிக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து, நேற்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டது.
இதனால் முறையான டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்த ஆட்டோ, டிராக்டர் டிரைவர்கள் நேற்று அரசு பஸ் டிரைவராக மாறி, பல்வேறு வழித்தடங்களில் பஸ்களை இயக்கினர்.
இன்று நிரந்தர ஊழியர்கள் நிறைய பேர் பணிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஐ.ஆர்.டி. பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனாலும், கிராமப்புற வழித்தடங்களில் முறையான நேரங்களில் பஸ்கள் இயங்கவில்லை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.