/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் அதிக கட்டணம்--
/
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் அதிக கட்டணம்--
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் அதிக கட்டணம்--
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் அதிக கட்டணம்--
ADDED : ஜூன் 08, 2025 11:19 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நகர் பகுதிக்கு வரும் பயணிகளிடம் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் 2006ல் புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள புது பஸ் ஸ்டாண்டிற்கு தொடர் இடைவெளிகளில் நகர் பகுதிக்கு வருவதற்கும் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பதற்கு டவுன் பஸ்கள், சர்குலர் பஸ்கள் இல்லை.
இதை பயன்படுத்தி ஆட்டோக்களில் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்கும் நிலை உள்ளது.
வெளியூரில் இருந்து வந்து இறங்கும் பயணிகள் நகர் பகுதிக்கு செல்லும் பஸ்களில் அதிக லக்கேஜ்களுடன் செல்வதற்கு வழி இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் நகரின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இல்லாததும், இரவு நேரங்களில் நடந்து செல்லும்போது திருட்டு பயம் போன்ற காரணங்களால் ஆட்டோக்களை நாட வேண்டியுள்ளது.
இதை பயன்படுத்தி பயணிகளிடம் ரூ.150 வரை கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதே நிலை பழைய பஸ் ஸ்டாண்ட் ஆட்டோக்களிலும் உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் சிரமம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.