/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனதை மயக்கும் மலர் செடிகள், மரங்களால் இதமான சூழல் ஆவியூர் அம்மா பூங்காவில் ரம்யம்
/
மனதை மயக்கும் மலர் செடிகள், மரங்களால் இதமான சூழல் ஆவியூர் அம்மா பூங்காவில் ரம்யம்
மனதை மயக்கும் மலர் செடிகள், மரங்களால் இதமான சூழல் ஆவியூர் அம்மா பூங்காவில் ரம்யம்
மனதை மயக்கும் மலர் செடிகள், மரங்களால் இதமான சூழல் ஆவியூர் அம்மா பூங்காவில் ரம்யம்
ADDED : ஜன 08, 2024 06:12 AM

கிராமப்புறங்களில் பெரும்பாலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து, ஊரின் அழகையே கெடுத்து விடும். இது போன்ற சுற்றுப்புற சூழல் மனிதனுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அருமருந்தாக இருப்பது இயற்கையான சூழல், ரம்யமான இடம்தான். எவ்வளவு பெரிய இடர்பாடுகள் இருந்தாலும் அழகான இயற்கை சூழ்நிலையை ரசிக்கும் போது அத்தனை துன்பங்களும் பறந்து போய்விடும்.
அழகான இயற்கை சூழலை ஏற்படுத்த வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். வாரம் வாரம் மரக்கன்றுகள் நடுதல், சுற்றுப்புறத்தை தூய்மைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அரசு ஏற்படுத்திக் கொடுத்த அம்மா பூங்கா பல இடங்களில் உடற்பயிற்சி கூடமாகத்தான் இருக்கின்றன. ஆனால் காரியாபட்டி ஆவியூரில் உள்ள அம்மா பூங்காவில் மினி சுற்றுலாதலம் போல காண முடிகிறது. இந்த ஊரை சுற்றி சீமைக் கருவேல மரங்கள் ஆங்காங்கே இருந்தாலும் கூட ஊருக்குள் மனதை மயக்கும் மலர் செடிகள், மரங்கள் சூழ்ந்து ரம்யமாகவும், அங்குள்ள குளுமையான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பவர்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
அந்த அளவிற்கு அம்மா பூங்காவில் வேம்பு, புங்கை, வாதாம், பூச்செடிகளில் போகன் வில்லா, மஞ்சள் அரளி, நந்தியாவட்டை உள்ளிட்ட மலர்கள் மனதை மயக்குவதாக இருக்கின்றன. இது போன்ற அழகான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதன் மூலம், கிராமங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை தெளிவுபடுத்துகிறது.
அதற்கு பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்கள் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் அனைத்து கிராமங்களிலும் இயற்கையான, ரம்யமான சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும்.