ADDED : ஏப் 11, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ,மேம்பாட்டு துறை சார்பில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
இணைவேந்தர் அறிவழகி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மாயாண்டி வரவேற்றார். இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசினர். பேராசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.
