தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 06, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்ட முன்னேறத் துடிக்கும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 3 மகளிர் குழுக்களுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் கடனுதவிகளையும், மருத்துவத்துறை சார்பில் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளும் வழங்கப்பட்டது.

விவசாயம், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.வேளாண் இணை இயக்குநர் விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமி பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us