ADDED : பிப் 07, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம் : ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிறப்பு விருந்தினராக யங் இந்தியன்ஸ்தூத்துக்குடி கிளை தலைவர் பகவத்சிங் தலைமை வகித்து சாலை பாதுகாப்பில் மாணவர்களின் கடமைகள் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கினார். பள்ளி மாணவர்களால் 'என் சாலை பாதுகாப்பு' உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
