ADDED : பிப் 25, 2026 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நிதி சார் கல்வி மையம் சார்பில் வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வங்கி மேலாளர் சேம் டேவிட்சன் தலைமை வகித்தார். மத்திய அரசின் விபத்து காப்பீடு திட்டமான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ஆயுள் காப்பீடு திட்டமான ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை, மொபைல் பேங்கிங் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கங்களை கூறினார். முகாமில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

