ADDED : நவ 22, 2026 05:25 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப் பொருள் இல்லாத பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமங்களில் போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
முள்ளிகுளத்தில் எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் போலீசார் மக்களிடம் போதைப் பொருள் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
