ADDED : பிப் 03, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் பசுமை படை மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். காலநிலை பற்றிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை போட்டிகளும், அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ் முன்னிலையில் நடந்தது.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தங்கமாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

