ADDED : ஆக 09, 2026 11:52 PM

சிவகாசி: சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகாசி காஸ்மாக் லயன்ஸ் சங்கம், மாவட்ட தடகள சங்கம் சார்பில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. சிறுவர்கள் ஆண்கள் பெண்கள் என 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு 42 மற்றும் 21 கி.மீ., துாரமும், பள்ளி மாணவர்களுக்கு 10- கி.மீ., மாணவிகளுக்கு 5- கி.மீ., என 5 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது. இதில் 91 வயது முதியவர் ராஜேந்திரன் 21 கி.மீ., பிரிவில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் சர்வதேச முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஏராளமான பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த அனைவருக்கும் பரிசுகள் சான்றிதழ்கள், வழங்கப்பட்டது.
