ADDED : ஜன 26, 2024 04:56 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் வருவாய் துறை, மாநகராட்சி சார்பில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வைத்து துவக்கி வைத்தனர். தாசில்தார் வடிவேல் முன்னிலை வகித்தார். தாலுகா அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முடிவடைந்தது.
மாநகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
