ADDED : மார் 14, 2024 03:03 AM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சங்கரா கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கினார். ராஜூக்கள் கல்லுாரி, கலசலிங்கம் கல்லுாரி, ஏ.கே.டி.ஆர் கல்லுாரி மாணவர்கள் கண் மருத்துவர் பரிசோதனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவிலிருந்து ரயில்வே மேம்பாலம் வரை ஊர்வலமாக சென்றனர். டாக்டர்கள் ஜெயராம், சுதா, பவித்ரா பங்கேற்று பேசினர்.
