ADDED : நவ 19, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, புகையிலை இல்லா இளைஞர் சமுதாயம் 3.0 விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புகையிலை இல்லா இளைஞர் சமுதாய உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தனர்.
மருத்துவ அலுவலர் மதன்லால், சுகாதார மேற்பார்வையாளர் அழகு சுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட னர்.

