ADDED : மார் 25, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தரப்பு வாக்காளர்களும் கட்டாயம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரியாபட்டியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் இலக்குவன் தொடங்கி வைத்தார்.
தேர்தல் விழிப்புணர்வை மக்களிடையே விரிவுபடுத்தும் வகையில், ஊர்வலம், கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் போன்றவை இடம் பெற்றன.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிப்போம், நம்மை ஆள்பவரை நாமே தேர்ந் தெடுப்போம், ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் என பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
பி.டி.ஓ.,கள் ஜெய ராமன், உஷா உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
