ADDED : ஏப் 05, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் தனி சட்டசபையில் நுாறு சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி நேற்று காலை 9:00 மணிக்கு தம்பிபட்டியில் இருந்து வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் வரை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் சரஸ்வதி தலைமையில் நடந்தது.
இதில் வருவாய்த்துறை, காவல்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோட்டையூர் ஆர்.ஐ. சுந்தர்ராஜ் தலைமையில் வருவாய் துறையினர் செய்திருந்தனர்.
