ADDED : ஏப் 14, 2026 04:58 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி;நரிக்குடி வீரசோழனில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மகளிர் திட்ட இயக்குநர் லக்குவன் துவங்கி வைத்தார். ரங்கோலி, சிலம்பம், கோலப்போட்டி, உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பஜார், பள்ளிவாசல் தெரு, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
பி.டி.ஓ.,க்கள் வாசுகி, செல்வக்குமார். உதவி திட்ட அலுவலர் பொண்ணுகுமார், வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர் சோணைமுத்து, ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
