ADDED : பிப் 07, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லூரி கணினி அறிவியல் சுயநிதி துறை சார்பில் கிராமப்புற பெண்களிடையே அரசு டிஜிட்டல் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டி கூட்டம் விளாம்பட்டியில் நடந்தது.
மாணவிகள் மிருதுளா பாண்டீஸ்வரி தொகுத்து வழங்கினர். மாணவி அஜித்தா வரவேற்றார். துறைத்தலைவர் பிரசில்லா விளக்கினார். உதவி பேராசிரியர் முஸ்ரத் நசீபா ஸ்மார்ட் பெண்கள் ஸ்மார்ட் சேவைகள் டிஜிட்டல் விழிப்புணர்வு திட்டம் என்ற தலைப்பில் பேசினார். மாணவி ஜோஷிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரிய உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி, வள்ளியம்மாள் செய்தனர்.

