ADDED : பிப் 10, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நோபிள் மகளிர் கல்லுாரியில் கொத்தடிமை தொழிலாளர் மீட்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் வரவேற்றார். கல்லுாரி கல்விக்குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர்.
முதல்வர் மோஸ்வரி முன்னிலை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தி, துணை ஆய்வாளர் மணிகண்டன், முத்திரை உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த தாக்கத்தை வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.
