UPDATED : ஆக 10, 2026 03:30 PM
ADDED : ஆக 10, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்;மல்லி சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி செயலர் திலீபன் ராஜா தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி தர்மராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல், பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுதல் குறித்து
பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் சுப்பிரமணியம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.
