ADDED : மார் 10, 2024 05:08 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி, : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பாக லோக்சபா தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மினி மாராத்தான் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, கல்லூரி தேர்வுத்துறை தலைவர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தனர். மந்திரி ஓடையிலிருந்து பஜார், பஸ் ஸ்டாண்ட் வழியாக நான்கு வழி சாலை வரை ஓட்டுரிமை குறித்து கோஷங்களை எழுப்பி மாணவர்கள் சென்றனர். தாசில்தார் மாரீஸ்வரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., அசோக் குமார் கணித பேராசிரியர் லட்சுமண ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
