ADDED : ஜூலை 24, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா காலேஜ் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்குதல், தனி மனித சுத்தம் பேணுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பெரிக்சான் எப்.எஸ்.எஸ்., நிறுவன வெண்டர் கார்த்தி கலந்து கொண்டு மாணவர்களிடம் உணவில் கலப்படம் அதை தடுக்கும் வழிமுறைகள், உணவில் சேர்க்கப்படும் சேர்க்கை பொருட்கள், உணவை பதப்படுத்துதல், உணவினால் மனிதனுக்கு ஏற்படும் அலர்ஜி, அரசின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள், பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்தல், தனி மனித சுத்தம் பேணுதல் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடம் பேசினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் சங்கரராஜ் செய்தார்.