ADDED : செப் 06, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
சாத்துார்: நாலாட்டின் புதுார் கே. ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேஷனல் பொறியியல் கல்லுாரியின் தகவல் தொழில் நுட்பத்துறை மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் உலகிற்கு மாணவர்களை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள், மாணவர்கள் இணைய வழி மோசடிகள், போலியான தகவல்கள், போலி இணையதளங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
சமூக வலைதள தகவல்களை சரிபார்த்தல் டிஜிட்டல் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
