ADDED : ஜூன் 06, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழ்நாடு வனத்துறை, மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இணைந்து உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் மனோரஞ்சிதம் தலைமை வகித்தார். சேத்துார் வனவர் கனகராஜ், ராஜபாளையம் செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர், ராஜூக்கள் கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பேரணி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் ரோடு, பண்ணையார் ஆர்ச், தாலுகா அலுவலகம் வழியே செக் போஸ்டில் முடிவடைந்தது.
முடிவில் ராஜுக்கள் கல்லுாரியில் 50க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டது.