ADDED : ஆக 01, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் ஜே.சி.ஐ.சாத்துார் மேச்சஸ் சிட்டி, இன்னர்வீல் கிளப் சார்பில் டி.எஸ்.பி அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை வரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு கல்லுாரி முதல்வர் தனலட்சுமி தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முனிசாயிகேசவன் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கினார். டி. எஸ்.பி.நாகராஜன் முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.ஜே.சி.ஐ.சாத்துார் மேச்சஸ் சிட்டி, இன்னர்வீல் கிளப் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.