ADDED : அக் 30, 2026 12:47 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சாரணர் இயக்கம், காரியாபட்டி அரசு மருத்துவமனை இணைந்து உலக பக்கவாத நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்லம் நடத்தினர்.
பள்ளி தாளாளர் கீதா தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை வரை மாணவர்கள் விழிப்புணர்வு பற்றிய கோஷங்கள், பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. டாக்டர். கண்ணன், முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி, நிர்வாகி துரை சிங்கம், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன், கண்காணிப்பாளர் ராஜசேகர், செவிலியர் பாரதி, மேலாளர் சரண்யா, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
