நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் காலை 10:30 மணிக்கு மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தாளாளர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார். பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் பிரவீனா வரவேற்றார். முதல்வர் கணேசன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் சர்மா பேசினர். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ஆமத்துார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஜீவா நன்றிக்கூறினார்.

