ADDED : ஏப் 11, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளா் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன. மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் கோலப் போட்டிகள் நடந்தன.
வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். 100 க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் '100% Vote' என்ற தேர்தல் வாசகம் வடிவில் நின்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
