ADDED : அக் 30, 2026 12:47 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதத்தை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, மூளை நரம்பியல் சிகிச்சை மருத்துவர் நந்தினி கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர்.
